Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு சேவைகள் அரச அமைப்புகளுக்கு

அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு

மத்திய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள,  அரசாங்கத்தின் காணிக் கொள்கைக்கு ஏற்ப அனைத்து பிரதேச செயலகங்களை நடத்துதல், ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள மாகாண சபையின் கீழ் எடுக்கப்படுகிற அரசுடைமையான காணி நிர்வாகம், நிர்வாகம், அக்காணிகளைப் பலதரப்பட்ட தேவைகளின் பொருட்டு பல்வேறு நபர்களுக்கும் நிறுவனங்களுக்கம் வழங்குதல், அக்காணிகளைப் பாதுகாத்தல் அபிவிருத்தி செய்தல் சம்பந்தமான பணிகளைச் செய்தல் என்பவை இத்திணைக்களத்தின் பிரதான கடமையாகும். அதன் பிரகாரம் காணி தொடர்பான கொள்கைகளைத் தயாரிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு நல்குதல், நடைமுறைப்படுத்துதல் ஆகிய பிரதான கடமைப் பொறுப்புகள் இத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகின்ற அதே நேரத்தில் அரசுடன் இணைந்த பல்வேறு நிறுவனங்களுக்குரிய காணிகள் தொடர்பில் செயற்படுகின்றபோது இத்திணைக்களம் பிரதேச நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றுகிறது. அதன் பிரகாரம்  ஊவா மாகாண சபையின் அதிகார பிரதேசத்தில் காணி நிர்வாகப் பணிகள் பிரதேச செயலாளர் மூலம் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

மத்திய அரசாங்கத்தில் காணி ஆணையாளர் நாயகம் மாகாண காணி ஆணையாளர் ஆகிய இருவரினதும் பிரதேச அடிப்படையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர் பிரதேச செயலாளராவார். இம்மூன்று நிறுவனங்களும் ஒரே சட்ட வரம்புக்குள் செயலாற்றுகின்றன.  ஊவா மாகாண சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகளின் நிர்வாகத்தின் சிற்சில அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பினும், மாகாணம் முழுவதிலும் பொது கொள்கையொன்றைப் பின்பற்ற வேண்டும் என்ற தேவiயின் அடிப்படையில் பிரதேச செயலாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுதல், உரிய சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் ஆலோசனை சேவைகளை வழங்குதல், பொதுமக்களின் நேரடி விசாரணைகளின் பொருட்டு உரிய உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நிறைவேற்றுதல் இத்திணைக்களத்தின் பிரதான கடமையாகும்.

காணி அபிவிருத்தி

இலங்கையின் ஆரம்பகால குடியேற்றத் திட்ட நிகழ்ச்சிகளின்போது காணி அபிவிருத்தி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு காணி அபிவிருத்தி திணைக்களமொன்றை அமைத்து  அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்திணைக்களம் காணிப் பயனாளிகளை குடியமர்த்துவதற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்;தியையும் சமூகவியல் காரணிகளையும் கவனத்திற் கொண்டு மனித அபிவிருத்தி நிகழ்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தியது. 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் அத்திணைக்களத்தை மூடியதை அடுத்து இப்பணிகளை காணி ஆணையாளர் அலுவலகம் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி கிராமங்களை விரிவுபடுத்துகின்ற திட்டத்தின் பிரகாரம் ஊவா மாகாணத்தின் காணி அபிவிருத்திப் பணிகள் ஊவா மாகாண சபையின் காணி ஆணையாளர் திணைக்களத்தின் மூலம் தற்போது நிறைவேற்றப்படுகின்றன. இதன் கீழ் அபிவிருத்தியற்ற காணிகளை அபவிருத்தி செய்தல், உள்ளக பாதைகளைப் பராமரித்;தல், குடிநீர் வழங்கல், நீரேந்து பகுதிகளைப் பாதுகாத்தல், விசேட குடியேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தல்  என்பன நடைபெறுகின்றன.

  1. அரசாங்க காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உரிமை மாற்றல் கட்டளை.

    முப்படைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பவற்றிற்கு காணி உரிமை மாற்றல் செய்யப்படுகின்றன. அதற்காக உரிமை மாற்றல் கட்டளைகளைத் தயாரித்தல் வேண்டும்.

  2. அரசாங்க காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை விடுவித்தல்.

    அரசாங்க திணைக்களங்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்கும்போது காணிகளை விடுவிக்கும் சான்றிதழ் ஒன்று பெற்றுக்கொடுக்கப்படும்.

  3. அரசாங்க காணிகள் (உடமையை மீளப்பெறல்) சட்டத்தின் கீழ் செயற்படல்.

    அரசாங்க காணியொன்றினை ஒருவர் அத்துமீறி படித்துள்ளபோது, 1979 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க அரசாங்க காணிகளை (உடமையை மீளப்பெறல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அந்த அத்துமீறிய நபரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

  4. காணி வருமானங்களை திரட்டுதல் மற்றும் கணக்கு வைத்தல்.

    ஊவா மாகாண சபையின் அதிகார பிரதேசத்தினுள் பல்வேறு கட்டளைச் சட்டங்களின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு உறுதிகளுக்காக குத்தகை கட்டணம் அறவிடல் மற்றும் வரி வருமானங்கள் தொடர்பாக உரிய முறையில் கணக்குகளைப் பேணி வருதல் என்பன இங்கு இடம்பெறுகின்றது. அதற்கேற்ப வருடாந்த வருமான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. வரி செலுத்தாதோர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, செலுத்த வேண்டிய வரி கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் புதிய வரி செலுத்த வேண்டிய சந்தர்ப்பங்களை இனங்காணல் போன்ற பணிகளும் இங்கு இடம்பெறுகின்றது.

 

 

 
மே 2020
S M T W T F S
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6

The Government Information centerr